துண்டிக்கப்பட்ட நினைவுகளை
கனவுகளில் துரத்திக்கொண்டிருந்தேன்
பெயர் இல்லா ஞாபகங்களில்
உனதானவற்றை மட்டும் காணவில்லை
களையும் காட்சிகளில் உனை தேடி அலைந்தேன்
நீ மட்டும் எப்பொழுதும் போல் இப்பொழுதும்
முகம் காட்டி மறைகிறாய்
எதோ ஒன்று உறுத்த
கொடுங்கனவில் இருந்து விழித்தெழுந்தேன்
படுக்கையின் ஒரு மூலையில் முள்ளாய் துருத்திக்கொண்டிருன்டது
நீ பேச மறந்த வார்த்தைகள்
Harga Xiaomi Redmi 4X Baru
8 years ago