காதலுக்கு
காரணம் தேவையா
நீ மட்டும் போதுமெனமல்லவா நினைத்திருந்தேன்
உனக்காக தேடி தேடி சேகரித்த வார்த்தைகள்
உன்னை கண்டதும்
ஒவ்வொன்றாய் உதிர்வது ஏனோ!
பாக்காமல் பார்கிறாயா
பார்த்தும் பார்க்கவில்லையா
ஏதோ ஒன்று
ஆனால் பறித்து விட்டு செல்கிறாய் மனதை!
வரிக்குதிரையின் கோடுகள் போல
நாட்கள் நழுவுகின்றன
காலை உணவாக காபி
புகை குளியல்
முகமுடி நண்பர்கள்
பசிக்காமல் உணவு
தெரியாத சுற்றம்
உலர்ந்த நகரம்
எட்டாக் காதல்
இப்படி குழந்தையின் கிருக்கலென
நகரும் நாட்களில் நான்
எப்போதாவுது ஜன்னலில் வழிந்தோடும்
மழைத் துளியை ரசிப்பதில்
மட்டும் வாழ்கிறேன்!
Harga Xiaomi Redmi 4X Baru
8 years ago