காதலுக்கு
காரணம் தேவையா
நீ மட்டும் போதுமெனமல்லவா நினைத்திருந்தேன்
உனக்காக தேடி தேடி சேகரித்த வார்த்தைகள்
உன்னை கண்டதும்
ஒவ்வொன்றாய் உதிர்வது ஏனோ!
பாக்காமல் பார்கிறாயா
பார்த்தும் பார்க்கவில்லையா
ஏதோ ஒன்று
ஆனால் பறித்து விட்டு செல்கிறாய் மனதை!
வரிக்குதிரையின் கோடுகள் போல
நாட்கள் நழுவுகின்றன
காலை உணவாக காபி
புகை குளியல்
முகமுடி நண்பர்கள்
பசிக்காமல் உணவு
தெரியாத சுற்றம்
உலர்ந்த நகரம்
எட்டாக் காதல்
இப்படி குழந்தையின் கிருக்கலென
நகரும் நாட்களில் நான்
எப்போதாவுது ஜன்னலில் வழிந்தோடும்
மழைத் துளியை ரசிப்பதில்
மட்டும் வாழ்கிறேன்!
Tuesday, October 14, 2008
Monday, October 13, 2008
Haikku
உன்னை பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்க
ஏன் இரண்டே வார்த்தைகள் மட்டும்
உன் கல்லறையில்
வியர்வையில் நீ
அவஸ்தையில் நான்
ஜன்னலோர காற்று கிடைக்குமா உனக்கு
நீல வானத்தில்
ஒற்றை காக்கா
உன்னை ஞாபகபடுத்துகிறது
ஒரு வீதி விடாமல்
உற்சவரோடு உலா வந்தனர்
பலூன்காரரும் அவரோடு சிறுவர்களும்
நேற்று பேய்த மழையில்
நனைந்தாலும் கிழியவில்லை
பின்பாக்கேடில் பத்திரமாய் பத்து ருபாய்
நொறுங்கிப்போன வண்டியில்
உடையாமல் இருந்தது
யாமிருக்க பயமேன்
உன்னை பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்க
ஏன் இரண்டே வார்த்தைகள் மட்டும்
உன் கல்லறையில்
வியர்வையில் நீ
அவஸ்தையில் நான்
ஜன்னலோர காற்று கிடைக்குமா உனக்கு
நீல வானத்தில்
ஒற்றை காக்கா
உன்னை ஞாபகபடுத்துகிறது
ஒரு வீதி விடாமல்
உற்சவரோடு உலா வந்தனர்
பலூன்காரரும் அவரோடு சிறுவர்களும்
நேற்று பேய்த மழையில்
நனைந்தாலும் கிழியவில்லை
பின்பாக்கேடில் பத்திரமாய் பத்து ருபாய்
நொறுங்கிப்போன வண்டியில்
உடையாமல் இருந்தது
யாமிருக்க பயமேன்
Subscribe to:
Posts (Atom)